திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 June 2024

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...

 


திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...



திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2001 முதல் 2008 ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷிபா ஜினி அமுதா  தலைமை வைத்தார். முன்னாள் ஆசிரியர்கள் முன்னிலை வைத்தனர். பள்ளிக்கல்வி மேலாண்மை குழு உறுப்பினரும், கல்வியாளருமான கண்ணபிரான், வரலாற்று ஆசிரியர் பாரதிராஜா, திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்து கலந்து கொண்டு அன்றைய கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பள்ளி படித்த காலத்தின் மறக்க முடியாத  நிகழ்வுகள், மகிழ்ச்சி யான சம்பவங்களை வெளிப்படுத்தி  அன்பை பரிமாறி கொண்டனர். விழாவில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நிறைவு பரிசு வழங்கப்பட்டது .மேலும் பள்ளியில் படித்து உயிரிழந்த முன்னாள் மாணவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக

MT.அந்தோணி ராஜா

திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad