CSI - TND அலுவலக கட்டிட - கான்கிரீட் தரை தளம் அமைக்கும் பணி.
தூத்துக்குடி, ஜூன் 22, தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்க்காக, தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கால்டுவெல் கல்லூரி அருகே 42000 சதுர அடியில், சுமார் 15 கோடி செலவில் புதிய பிரமாண்டமாக அமைய இருக்கும் இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று ஜூன்.22 காலை, திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன், மேலாளர் பிரேம்குமார் , துணை தலைவர் அருட்திரு. தமிழ் செல்வன், குருத்துவ காரியதரிசி இமானுவேல் வான்ஸ்றக் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அனைத்து சபை குருவானவர்கள் பலர் முன்னிலையில் தரைதளம் கான்கிரீட் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. அதற்காக குழுவாக நின்று ஜெபம் செய்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருமண்டல குருவானவர்கள், பெருமன்ற உறுப்பினர்கள், திருமண்டல அனைத்து பணியாளர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment