திருச்செந்தூர் - ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை.
திருச்செந்தூர், ஜூன்.23, நகராட்சி அலுவலகம் முன்பாக இருந்த பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையினால் சேதமடைந்து இருந்தது. அதனால் அதனை மீண்டும் புதிதாக அமைக்கும் பணி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் நகர் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மிக நெரிசலுடன் காணப்படுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து வந்து செல்லும் வாகனங்கள் திருச்செந்தூர் நகருக்குள் வந்து செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாலம் பணிகள் 15 நாட்களாகியும் பெரிய அளவில் எவ்வித வேலையும் இன்றி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால் அவசர தேவைக்கு ½ கி. மீ ஊரை சுற்றி அரசு மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது. மட்டுமின்றி சரியான நேரத்தில் பேருந்து மற்றும் ரயிலை பிடிக்க முடியாமல் தவற விடும் பயணிகள் என, பட்டியலிடும் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில தலைவர் ரெ. காமராசு நாடார்.
மேலும், வியாபார பெருமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாலம் பணிகளை பகல், இரவு முறையாக 2 ஷிப்ட்களாக தொடர்ந்து வேலை செய்து முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில தலைவர் ரெ. காமராசு நாடார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment