தூத்துக்குடியில் 35பேருக்கு சிங்கப்பெண் விருதை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 June 2024

தூத்துக்குடியில் 35பேருக்கு சிங்கப்பெண் விருதை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!!


தூத்துக்குடியில் 35பேருக்கு சிங்கப்பெண் விருதை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!!


தூத்துக்குடியில் பெண்கள் அமைப்பின் ஆண்டு விழாவில் 35 பெண்களுக்கு சிங்கப்பெண் விருதினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.  


தூத்துக்குடி கைலாஷ் மஹாலில் 'விவாதிக்கலாம் பெண்கள் அமைப்பின்' மூன்றாவது ஆண்டு விழா  நேற்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 35 பெண்களுக்கு சிங்கப்பெண் விருதினை  வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பெண்கள் அமைப்பின் இயக்குனர் ராஜன், தலைவர்  உமா காசிதங்கம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்  ஜெயினி பிரான்சினா, ஆடிட்டர்  ரோகிணி லட்சுமணன், அரிமா மாவட்டத்தின் முதல் பெண்மணி  பிரமிளா பிரான்சிஸ் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad