கஞ்சா வழக்கு - குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.
தூத்துக்குடி, ஜூன்.03, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை.
கடந்த 03.05.2024 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பாஸ்கர் (எ) சுறா பாஸ்கர் (44) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பாஸ்கர் (எ) சுறா பாஸ்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பாஸ்கர் (எ) சுறா பாஸ்கர் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் & தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன். தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment