காயாமொழி ஊராட்சி தலைவர் தேர்தல்....மறுவாக்கு பதிவு
காயாமொழி ஊராட்சி தலைவர்
தேர்தல் மறுவாக்கு பதிவு
எண்ணிக்கையில் ராஜேஸ்வரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி......கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி......தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சித் தலைவர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வை சேர்ந்த ராஜேஸ்வரன் 1,071 வாக்குகளும், முரளிமனோகர் 1,070 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என முரளிமனோகர் தொடர்ந்தவழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராஜேஸ்வரன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து இன்று மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. பிடிஓ ஆன்றோ தலைமையில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கை ராஜேஸ்வரன் 1069 வாக்குகளும் முரளி மனோகர் 1068 வாக்கு இடம் பெற்றனர். 105 வாக்கு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ராஜேஸ்வரனுக்கு காயாமொழி தி மு க சார்பில் காயாமொழி கஸ்பா திமுக செயலாளர் பத்மநாபன், குமாரசாமிபுரம் செயலாளர்ராகவன், சுப்பிரமணியபுரம் முத்துமாணிக்கம், மாரியப்பன், விவேகானந்தன், கோமதிநாயகம், செந்தில் குமார், சேக்முகைதீன், பாஸ்கர், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment