திருச்செந்தூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழாவியாபாரிகள் சங்க தலைவர் துரைசிங் ஷோரூமை திறந்துவைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 June 2024

திருச்செந்தூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழாவியாபாரிகள் சங்க தலைவர் துரைசிங் ஷோரூமை திறந்துவைத்தார்.


 திருச்செந்தூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழாவியாபாரிகள் சங்க தலைவர் துரைசிங் ஷோரூமை திறந்துவைத்தார்.




'மதிப்பிற்குரியவர்களுக்கு' என்ற முத்திரையுடன் கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆடைகள்  மக்கள் விரும்பும் முதல் தேர்வாக உள்ளது. வேட்டிகள், சர்ட்டுகளுக்கான பிராண்டில் இந்தியாவில் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் விற்பனை நடந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் புதிய ஷோரூம் திருச்செந்தூரில் இன்று திக்கப்படடது.


திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் நடந்த திறப்பு விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் துரைசிங் ஷோரூமை திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் சிவஆனந்தி குத்துவிளக்கேற்றினார். திருச்செந்தூர் வணிகர்கள் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் காமராசு நாடார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் சாந்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் கார்க்கி ஆகியோர் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.நாகராஜன் வரவேற்றார். திறப்பு விழாவில் நிறுவனத்தின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நகர பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad