செய்துங்கநல்லூர் - சேவியர் பாலிடெக்னிக்கில் ஆசிரியர்களுக்கு பிரிவு உபசார விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 June 2024

செய்துங்கநல்லூர் - சேவியர் பாலிடெக்னிக்கில் ஆசிரியர்களுக்கு பிரிவு உபசார விழா.

 


செய்துங்கநல்லூர் - சேவியர் பாலிடெக்னிக்கில் ஆசிரியர்களுக்கு பிரிவு உபசார விழா.


ஸ்ரீவைகுண்டம், ஜூன்.15, 40 ஆண்டுகளாக செய்துங்கநல்லூரில் இயங்கி வரும் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த சந்திரசேகரன், வெங்கடேஷ் மற்றும் மைக்கேல் ராயன் ஆகிய மூன்று ஆசிரியர்கள் பணி நிறைவு பெற்றனர்.


பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் பிரிவு உபசார விழா கல்லூரியில் நேற்று ஜூன்.14 மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ் ஆவுடையப்பன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின், பணி காலத்தில் நடந்த பல சுவாரசியமான நினைவுகளை கல்லூரி ஆசிரியர்கள் பரிமளம், பால பிரபா, நாகராஜா, ரூபினா, ஜாய்ஸ் மேரி, ஆறுமுக சேகர், ஜான் செண்பகத்துறை மற்றும் பல ஆசிரியர்கள் நினைவு கூர்ந்து பேசினர். பின்னர் அவர்களை வாழ்த்தும் விதமாக முதல்வர், துணை முதல்வர் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆய்வக போதகர்கள் மற்றும் காப்பாளர்கள் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.


பின்னர் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சந்திரசேகரன் பேசும் போது ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை முழு ஈடுபாட்டுடன் முழு மனதுடன் பணிகளை நிறைவேற்ற வேண்டும், அப்படி செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி நமது மூளைக்கு பாஸிட்டிவ் எனர்ஜியை பெற்று தரும் என்று நெகிழ்வுடன் பேசினார்.
பேராசிரியர் வெங்கடேஷ் பேசும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்று கொள்ளுங்கள் அப்போது தான் மாணவர்களுக்கு நாம் கற்று கொடுத்து திறம்பட செயல்பட முடியும் என ஏற்புரை வழங்கினார்.


முடிவில் ஆசிரியர் சர்மிலி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை கல்லூரி தாளாளர் ஆணைப்படி முதல்வர் தலைமையில் சிறப்பாக செய்து இருந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad