திருச்செந்தூரில் பாமக பிரமுகரின் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் நிர்வாகிகள் பங்கேற்று ஆசி பெற்றனர்
திருச்செந்தூரை ஜெயந்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஐயர்-விஜயலட்சுமி தம்பதியினரின் ஷஷ்டிதம அப்த பூர்த்தி சாந்தி சுப முகூர்த்தம் (60ம் கல்யாணம்) திருச்செந்தூர் தெப்பக்குளம் கிருஷ்ணமகாலில் இன்று திங்கட்கிழமை காலை நடந்தது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர் திலகபாமா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் நாட்டாமை ( எ) சிவபெருமாள், நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சியோன் எஸ்.தங்கராஜ், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சின்னதுரை, வடக்கு மாவட்ட தலைவர் மாடசாமி, தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன் நாடார், திருச்செந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகர், நகர அமைப்பு செயலாளர் மணிராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு 60ம் ஆண்டு திருமணம் கண்ட தம்பதியினரிடம் வாழ்த்து பெற்றனர். மேலும் இந்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை சூர்யநாராயணன் பாலாஜி-ராஜேஸ்வரி,கிரிபிரசாத்-நாகேஸ்வரி வைஷ்ணவி, அன்னபூரணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment