மேனிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை சீரமைக்க கோரிக்கை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 June 2024

மேனிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை சீரமைக்க கோரிக்கை

 


மேனிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை சீரமைக்க கோரிக்கை


நாசரேத், ஜூன்.18, நாசரேத் வகுத்தான்குப்பம் 10 வது மற்றும் 13 வது வார்டு பகுதி மக்களுக்காக, 2017-2018 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ நிதியிலிருந்து கான்ட்ராக்டர் ரகுபதி மேற்பார்வையில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.


தற்போது அந்த மேனிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. எனவே அதனை உடனடியாக சரி செய்திடவும்,


வகுத்தான்குப்பம் முதல் மோசஸ் தெரு வரை உள்ள தார் சாலையானது கடந்த 2023 டிசம்பரில் பெய்த கன மழையில் பழுதாகி, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவ்வழியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பயிலும் பள்ளி குழந்தைகள், தனியார் மருத்துவமனையினை பயன்படுத்தும்
பிணியாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.


எனவே மேற்படி சாலையினை புதிதாக அமைத்து தர வேண்டி நாசரேத் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு, நாசரேத் தி.மு.க வை சார்ந்த மாவட்ட பிரதிநிதி மனு ஒன்றை அளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad