TMB CDM மெஷின் கேட்டு ஆத்தூர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 26 May 2024

TMB CDM மெஷின் கேட்டு ஆத்தூர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

 


TMB CDM மெஷின் கேட்டு ஆத்தூர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை


தூத்துக்குடி மாவட்டம், மே 26, ஆத்தூர், நேற்று இம்மாத நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை. இதனால் வங்கியில் பணம் செலுத்த மற்றும் கடன் தவணைத் தொகை செலுத்த  ஆத்தூர் வங்கி வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் அருகில் உள்ள ஆறுமுகனேரி குரும்பூர் ,ஏரல் பகுதிகளுக்கு படையெடுத்தனர். 


பணத்தை எடுப்பதற்கு எளிதாக UPI வசதி அநேக கடைகளில் இருப்பதால் பணம் பெற்று கொள்வதில் பாதிப்பு இல்லை. 


ஆனால் பணம் செலுத்துவதற்கு வங்கியை தேடி செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, 


ஆத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏடிஎம் மையத்தில்  இரு ஏடிஎம் இயந்திரங்களும் பணம் வழங்கும் இயந்திரமாகவே உள்ளது.


இதே TMB வங்கி கிளை ஆறுமுகநேரி, ஏரலில் இரு இடங்களில்  தானியங்கி (CDM - cash deposit machine) பணம் செலுத்தும் வசதியுடன் ஏடிஎம் அமைத்துள்ளது.  


ஆத்தூர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் இந்த நீண்ட நாள் குறையை ஆத்தூர் பஜார் வியாபாரிகள் சங்கம் வங்கி தலைமை இடத்தில் தெரிவித்து உடனடியாக ஆத்தூரில் தானியங்கி பணம் செலுத்தும் வசதியை கொண்டு வர வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம்  தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad