பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 26 May 2024

பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 


பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், மே. 26, தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPC) மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் (IEA) ஆகியவற்றை ரத்து செய்வதற்கு பாராளுமன்றத்தால் 'பாரதிய நியாய சன்ஹிதா" (Bharatiya Nyaya Sankhita - BNS), 2023 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா" (Bharatiya Nagarik Suraksha Sanhita - BNSS) 2023 மற்றும் 'பாரதிய சாக்ஷிய அதினியம்" (Bharatya Sakshya Adhiniyam - BSA) 2023 ஆகியவை 25.12.2023 அன்று இயற்றப்பட்டுள்ளது.



இந்த புதிய சட்டங்கள் 01.07.2024 முதல் அமலுக்கு வருவதையடுத்து இச்சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி இன்று (25.05.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இப்பயிற்சியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தார்.


இந்த பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி திரு. லோகேஸ்வரன், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், மாவட்ட குற்றப்பிரிவு திரு. ராஜு உட்பட அனைத்து உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



தூத்துக்குடி மாவட்டம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad