குரும்பூர் - பைக் விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 May 2024

குரும்பூர் - பைக் விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு.

 


குரும்பூர் - பைக் விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு. 


தூத்துக்குடி மாவட்டம், மே.24, குரும்பூர் அருகே உள்ள குழைக்கநாதபுரத்தில் கட்டேறும் பெருமாள் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. 


இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவானந்தம் (22) செந்தூர் பாண்டி மகன் பிரதீப் குமார் (20) ஆகிய இருவரும் கொடை விழாவுக்கு சென்று விட்டு கிராமத்திற்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.


அங்குள்ள வணிக வளாகம் அருகில் வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad