ஏரல் - பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 May 2024

ஏரல் - பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.

 


ஏரல் - பைக் விபத்தில் காயம்  அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். 


தூத்துக்குடி மாவட்டம், மே.24,  ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார் மகன் மாரிமுத்து (26). 


இவர் கடந்த 21 ஆம் தேதி வாழவல்லான் கிராமத்தில் இருந்து ஆத்தூருக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். 


முக்காணி அருகே வரும்போது, பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 


இது குறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad