தூத்துக்குடி - துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 May 2024

தூத்துக்குடி - துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை.

 


தூத்துக்குடி - துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை.


தூத்துக்குடி, மே.24, வ.உ.சி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டது.


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக தீவிரப் புயலாக வலுப்பெற்று வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று (மே.24) ஏற்றப்பட்டது.


ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad