நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி அய்யா வைகுண்ட சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை பால் முறை திருவிழா!
நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி அய்யா வைகுண்ட சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை பால்முறை திருவிழாவினை முன் னிட்டு அய்யாவுக்கு பணிவிடை கள் செய்து உகப்படிப்போடு துவங்கியது மதியம் அய்யாவுக்கு பணிவிடை செய்த பிறகு உச்சிப் படிப்பு நடைபெற்றது.இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம்செய்தனர்.இதனை தொடர்ந்துபக்தர்களுக்கு அன்னதர் மமும் இனிமமும் வழங்கப்பட்டது. மாலை பஜனையும்,பணிவிடையும் திருவிளக்கு வழிபாடும் நடைபெற் றது.உகப்படிப்பு பாடியபின் திரு விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment