காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நாசரேத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 13 May 2024

காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நாசரேத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

 


காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நாசரேத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா 

 
 நாசரேத்தில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. 
நாசரேத்தில்  மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நீர் மோர்  பந்தல் அமைக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது. மாவட்ட செயலாளரும், நாசரேத் பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ்குமார் தலைமை வகித்தார்.
கர்நாடகா மாநில செயலாளர் சின்னத்துரை, ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் டேனியல் ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரகாசபுரம்  எஸ் டி ஏ ஜேம்ஸ்  மெமோரியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எட்வின் சாமுவேல் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு மோர், ரஸ்னா ,தர்பூசணி  மற்றும் பழ வகைகள்  வழங்கப்பட்டது. இதில் காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட விவசாய அணி தலைவர் பீட்டர், ஆழ்வை  ஒன்றிய தொழிற்சங்க துணைத்தலைவர் பெருமாள், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் சகாயராஜ் ,உடன்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாசகன், துணைச் செயலாளர் வள்ளமுத்து ,
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் அகஸ்டின் , ஆழ்வை ஒன்றிய மாணவரணி செயலாளர் ஐபெல் , துணைச் செயலாளர் ஆபிரகாம், இணைச் செயலாளர் அவினாஷ் ,நகர மாணவரணி துணை செயலாளர் வினோத் ,இணைச் செயலாளர் நாதன், ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் யோவான், நகர இளைஞரணி துணைச் செயலாளர் மோகன், நகர தகவல் தொழில்நுட்ப தலைவர் ஜெபரசன் ,நகர தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவர் லாயல் மற்றும்  நசரேயன், நோவா, ஜென்டில்மேன் ,தனசிங் ,டேவிட்  ,ராம் சிங், டெல்பின், செல்வன் ,சேகர், காமராஜர் ஆதித்தனார் கழக இளைஞர் அணி ஜபர்சன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad