தமிழக அரசே தண்ணீர் ஊற்று - ஒலிக்கிறது மரங்களின் குரல்.
சாத்தான்குளம், மே 15, தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்கள் தற்போது கோடை வெயிலில் வாடிக் கொண்டே இருக்கின்றது.
அதை கண்டு இன்று யாரோ நல்ல ஒரு மனிதர் மரங்கள் வாடுவதை தாங்க முடியாதமல், "தமிழக அரசே தண்ணீர் ஊற்று, Goverment தண்ணீர் ஊற்று" எனும் வாசகங்களை மரக்கன்றுகளில் எழுதி வைத்துள்ளார்.
இதை காப்பாற்ற முன் வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார். கடைகளுக்கும் வீடுகளுக்கும் அருகே இருக்கின்ற மரத்தை கூட காப்பாற்ற மனமில்லாதப்படி மனிதம் செத்து விட்டதை இதன் மூலம் காண முடிகிறது.
இதற்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றும் நடைபெறாது நாமே களமிறங்கி இதை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன்.


No comments:
Post a Comment