ஆழ்வார்திருநகரி ஸ்வாமி நம்மாழ்வார் அவதார திருவிழா கொடியேற்றம்.
ஏரல், மே.14. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஸ்வாமி நம்மாழ்வார் அவதார திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு திருமஞ்சனம், 6.45 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது, காலை 7.15 மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன், விவேக், பாலாஜி ஆகியோர் ஏற்பாடு செய்தார்கள்.
கண்ணன் பட்டாச்சாரியார் கொடியேற்றினார். விழா காலங்களில் தினமும் காலை ஸ்வாமி நம்மாழ்வார் தோளுக்கினியானில் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு இந்திர விமானம். பூம்பல்லக்கு, புன்னைமரம், திருப்பளியடி வாகனம், அன்ன வாகனம், யானை, சந்திர பிரபை, குதிரை வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அகோபிலம் ஜீயர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் சதீஷ் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன் செந்தில் குமார், காளிமுத்து, ராமலட்சுமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மே 14 ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment