கருங்குளம் பகுதியில் தீடிர் மழை - நிழற்குடை இன்றி பயணிகள் தவிப்பு.
செய்துங்கநல்லூர், மே 10, கருங்குளம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக நேற்றும் மே.9 இன்றும் மே.10, பிற்பகல் நேரங்களில் திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இருந்த போதிலும் கருங்குளம் பகுதியில், திருநெல்வேலி மார்க்கமாக செல்லக்கூடிய பயணிகளுக்கு கடந்த மாதம், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிழற்குடையை திறந்து வைத்தார். ஆனால் அதற்கு மறுபுறமாக உள்ள திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு நிழற்குடை ஏதுமில்லை.
இதனால் திடீர் மழையில் நனைந்தபடியே மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதியில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டி பயணிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment