நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!
பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகி த்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர் சோம் ஜெபராஜ் மாணவர்களை வாழ்த்தி பாராட்டி பேசினார். பன்னி ரெண்டாம் வகுப்பு பி பிரிவு மாண வர் சூர்யா 556 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே முதலிடமும், பன்னிரண்டாம் வகுப்பு சி பிரிவு மாணவர் 542 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே இரண்டாம் இடமும், பன்னிரண்டாம் வகுப்பு பி பிரிவு மாணவர் முகமது அசிம் 528 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலைமையாசிரி யர் கென்னடி வேதராஜ் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச் சியில் முதுகலை வரலாற்று ஆசி ரியை தங்கவின் நேசராணி மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர் அம்பு ரோஸ் சுகிர்தராஜ், ஆசிரியை குயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment