நாசரேத் அருகே தனியார் வங்கி ஊழியரை வழிமறித்து மிரட்டி செயின், செல்போன் பறிப்பு !அண்ணன், தம்பி உள்பட 3பேர் கைது!
நாசரேத் அருகே தனியார் வங்கி ஊழியரை வழி மறித்து மிரட்டி தங்கச் செயின், செல்போனை பறித்த அண்ணன், தம்பி உள்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் மனோவா (28). இவர் ஆறுமுகநேரி ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியில் சுய உதவிக்குழு கடனை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குரும்பூர் _ நாசரேத் ரோட்டில் உள்ள நெய்விளை அருகே பைக்கில் சென்ற போது 3பேர் அவரை வழிமறித்து மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் மனோவா புகார் செய்தார். சப் _ இன்ஸ்பெக்டர் வைகுண்ட தாஸ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தியதில் நெய்விளை பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் பால சதீஷ்குமார் (23), கந்தன் மகன்கள் மாயாண்டி (48), மாடசாமி (37) ஆகிய 3பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3பேரையும் கைது செய்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment