நாசரேத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
நாசரேத்தில் திருச் செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் பிரதான சாலை ஐந்தாவது தெரு முனையில்
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலா ளர் இரத்தினபாண்டியன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் அன்சார் அலி, செயலாளர் பாலமுருகன், வீரத்தமிழர் முன்னணி செயலாளர் பாஸ்கர், நாசரேத் மில்டன்,பாஸ்கர், அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார் கலந்துகொண்டு நீர் , மோர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங் கியும்,தூய்மை பணியாளர்களுக்கு உடைகள் வழங்கியும் சிறப்பித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை திருச் செந்தூர் சட்டமன்றத் தொகுதி மருத்துவர் பாசறை தொகுதி செய லாளர் விஜய்ஆனந்த் தலைமை யில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment