திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.49 கோடி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.2.49 கோடி வருமானம் மற்றும் 1 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.
உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது.
இதையடுத்து மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையிலும், கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன்,
ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள்
பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் மற்றும் பதிணென் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் எண்ணிக்கையின் மூலம் ரூ.2 கோடியே 49 லட்சத்து 44 ஆயிரத்து 699 ரூபாயும் கிடைத்துள்ளது.
மேலும் தங்கம் 1கிலோ 100கிராமும், வெள்ளி 24 கிலோவும் , 326 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்

No comments:
Post a Comment