சாத்தான்குளம் புலமாடன் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
சாத்தான்குளம், மே 7: பிளஸ் 2 தேர்வில் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ ஆர்எம்பி மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 165 பேர்களில் 161 பேர்கள் தேர்ச்சி பெற்றனர். இது மொத்த அளவில் 99 சதவீதம் தேர்ச்சியாகும். இதில் 554 மதிபெண் எடுத்து மாணவி ராஜலட்சுமி முதலிடமும், 542 மதிப்பெண் எடுத்து மாணவி சுப்புலட்சுமி கயல்விழி 2ஆம் இடமும், 539 மதிப்பெண் எடுத்து மாணவர் தவனேஷ், முத்துராஜா 3ஆம் இடமும் பெற்ற னர். மாணவி சுப்புலட்சுமி கயல்விழி கணினி அறிவியலில் 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.
வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டேவிட் வேதராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயசிங் மனுவேல், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சாம் ஜெயகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment