பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 May 2024

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவு விழா

 


பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவு விழா 



பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவு விழா நடந்தது. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில்  விபிஎஸ்  வகுப்புகள் 7 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா ஆலய வளாகத்தில் நடந்தது. 


சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பீரிடா நவராஜ் முன்னிலை வகித்தார். ஜேசிந்த், அபிஷா ஆகியோர் விபிஎஸ் இயக்குனர்களாக செயல்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன .வேதாகம தேர்வில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.    
நல்லம்மாள்  மார்க்கெட் நன்றி கூறினார். 


ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், சபை ஊழியர் ஸ்டான்லி, ஒருங்கிணைப்பாளர் பாக்கிய வல்லி , ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இம்மானுவேல், ஆலய பணியாளர் டிக்சன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர். 


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad