மதிமுக 31வது ஆண்டு தொடக்க விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மே 07. ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மற்றும் நாசரேத்து பேரூர் மதிமுக சார்பில் மதிமுக 31வது ஆண்டு தொடக்க விழா
ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு நாசரேத்து சந்தி வீதியில் வெடி வெடித்து இனிப்புக்கள் வழங்கினர்.
பின்னர்,இரவு 7:00 மணி அளவில் நாசரேத்து நல்ல சமாரியன் மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கினர். இந்நிகழ்வில், நாசரேத்து பேரூர் செயலர் ஐ.இராபர்ட், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன்சிங், மாவட்ட பிரதிநிதி கேம்பலபாத் செ.அப்துல் காதர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மூ.பாபுசெல்வன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி துணைச் செயலர் செல்வாஸ், ஆழ்வை ஒன்றிய மதிமுக துணைச் செயலர் லூ.மாசில்லாமணி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலர் ச.கணேசன்,தொண்டர் படை முத்து கிருஷ்ணன்,கட்டாரி மங்கலம் சீயோன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment