திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலைகளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 16 May 2024

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலைகளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி!

 


திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலைகளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி!



 திருமறையூர் மறு ரூப ஆலயத்தில் பனை ஓலைக ளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி நடைபெற்றது.
              

நாசரேத் அருகில் உள்ள 
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலைகளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை மும்பை மெதடிஸ்ட் சபையின் போத கரும் தமிழ்நாடு பனைத் தொழிலா ளர்கள் நல வாரியத்தின் உறுப்பின ருமாகிய போதகர் காட்சன் சாமு வேல்  வழங்கினார்.பனை ஓலைக ளைக் கொண்டு வாழ்த்து அட்டை தயாரித்தல், படங்கள் தயாரித்தல் போன்றபயிற்சிகள்வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாசரேத் சுற்று வட் டாரத்தில் இருந்து மாணவ,மாணவி கள் கலந்து கொண்டனர். பனை யின் முக்கியத்துவத்தை மக்களு க்கு எடுத்துக் கூறவும், விடுமுறை நாட்களை மாணவ மாணவிகள் பயனுள்ள முறையில் செலவிடவும் இப்பயிற்சி மிக உறுதுணையாக அமைந்தது.இதற்கானஏற்பாடுகளை தென்னிந்திய திருச்சபை சினாடு மாமன்றத்தின் சுற்றுச் சூழல் கரிசனை துறையின் இணை இயக்குனரும், திருமறையூர் சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தார்.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad