நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 16 May 2024

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா

 


நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா 


 
நாசரேத்  தூய யோவான் பேராலய த்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா நடந்தது. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத்  தூய யோவான் பேராலயத்தில்  விபிஎஸ் வகுப்புகள் 10 நாட்கள் நடந்தது.இதன் நிறைவு விழா  பேராலய வளாகத்தில் நடந்தது.  தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். சுவீட்டி, ஏஞ்சல், ஹெலன், ஆசா, சோபியா   ஆகியோர்  விபிஎஸ் இயக்குனர்களாகவும் , 71 பேர் ஆசிரியர் களாகவும் செயல்பட்டனர்.  மாணவ_ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கும்,   பணியாற்றிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 550  மாணவ_ மாணவிகள்  பங்கேற்றனர் .
ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம், உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், சேகர பொருளாளர்  எபனேசர் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
 

நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad