நாசரேத் அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் முகேஷ் மரணம்!
நாசரேத் அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் முகேஷ் சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். நாசரேத் அருகில் உள்ள
செம்பூர் கீழத் தெருவை சேர்ந்த கோட்டாளம் மகன் முகேஷ் (வயது 22). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு ஆட்டோ டிரைவராக கோவையில் பணி செய்து வருகிறார். தனது ஊரிலுள்ள கோவிலில் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு சமீபத் தில் வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி தங்களது வயலில் நெல் அறு வடையை முடித்துவிட்டு அறுவடை செய்த நெல்லை குடோனில் சேமி த்து வைப்பதற்காக நாசரேத்திற்கு தனது நண்பர் செம்பூர் அருகில் உள்ள தவசிநகரைசேர்ந்த செல்வ ராஜ் மகன் நிதி ஷ்குமார் (வயது 24) என்பவருடன் பைக்கில் சென்று விட்டு ஊர்திரும்பிய போது கொமந் தான்நகரை அடுத்தாற்போல்உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி வேன் மீது பைக் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் படுகா யமடைந்த இரண்டு பேரும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர்.இது குறி த்து முகேஷ் தாயார் மாரியம்மாள் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் நாசரேத் போலீஸ் ஏட்டு வேல்பாண்டி வழக்குப்பதிவு செய்தார்.இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி வந் தார். இந்நிலையில் நேற்று(16.5.24) காலை முகேஷ் சிகிச்சை பலனளிக் காமல் இறந்தார்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment