திருச்செந்தூரில் இடிமின்னலுடன் கனமழை மின்சாரம் துண்டிப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 May 2024

திருச்செந்தூரில் இடிமின்னலுடன் கனமழை மின்சாரம் துண்டிப்பு

 


திருச்செந்தூரில் இடிமின்னலுடன் கனமழை மின்சாரம் துண்டிப்பு



தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைமழை அதிகமாக பெய்யத் துவங்கு உள்ளது. இதனை தொடர்ந்து 16.5.24 முதல் 19-5.24 வரை மூன்று நாட்கள் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டுமென எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனை தொடந்து நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு இடி மின்னல்களுடன் கூடிய மழை பெய்தது. வேகமாக அதிக சத்தத்துடன் கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. தொடர்ந்து மழை ஆரம்பித்தவுடன் அதிகாரிகள் உத்தரவுப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 12 மணிவரை தொடர் மழை பெய்து பின்னர் மழை நின்றது பின்னர் மின்இணைப்பு வழங்கப்பட்டது. கனமழை காரணமாக தெருவெங்கும் மழைநீர் தேங்கி நின்றது தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் ஒரு சில மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலார்ட் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆரஞ்ச் அலார்ட் குறிப்பிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad