திருச்செந்தூர்- காயல்பட்டினம் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆணையின்படி மாநில பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று காயல்பட்டினம் நகர தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது,
இவ்விழாவில் திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் எஸ். விஜய் ஆனந்த் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் மாணவர் அணி தலைவர் தெறி திலீபன் பத்ரி பிரசாத் மீனவர் அணி தலைவர் ஆபிரகாம் மற்றும் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீர்,மோர் பந்தல் ஏற்பாட்டினை
தமிழக வெற்றி கழகத்தின் காயல்பட்டினம் நகரத் தலைவர் மொய்தீன் செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment