மரக்கன்றுகளை காக்க புது முயற்சி
நாசரேத், மே 08. சாலை ஓரங்களில் மழைக்காலங்களில் நடப்பட்ட மரங்கள் இந்த கோடை வெயில் தாங்காதப்படியால் வாடிக் கொண்டிருக்கின்றது. தண்ணீர் ஊற்றுவதற்கு ஆட்கள் இல்லாமல் பராமரிப்பற்றி காணப்படுகின்றது.
எனவே சோதனை ஓட்டமாக இரண்டு மரங்களுக்கு நாங்கள் தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ட்யூப் மூலமாக சொட்டுநீர் பாசனம் ஏற்படுத்தி விட்டு வந்திருக்கின்றோம். இன்னும் பத்து மரத்திற்கு அமைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.
ஒரு வாரத்திற்குள்ளாக நாசரேத்தில் இருந்து சாத்தான்குளம் வரை செல்லும் மரங்களுக்கு சொட்டுநீர் அமைப்பை ஏற்படுத்த இருக்கின்றோம். நீங்களும் இந்த பாதையை கடந்து செல்லும் பொழுது உங்களுடைய கரத்தில் இருக்கிற தண்ணீரை ஊற்றி இந்த மரங்களை இந்தக் கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்றுங்கள், என சுற்று சூழல் மற்றும் கரிசனை துறை இயக்குனரும் திருமறையூர் சேகர தலைவருமான அருட்திரு ஜான் சாமுவேல் மற்றும் பள்ளி மாணவர்களும் கேட்டு கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment