தூத்துக்குடியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி.
தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் இன்று (11.05.2024) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து, தூத்துக்குடி கல்வி மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற "கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மகேந்திர கிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்தின் விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உயர்கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககத்தின் இயக்குநர் க.இளம்பகவத், இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன்,இ.ஆ.ப., மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரிக் கனவு - உயர்கல்வி வழிகாட்டி கையேட்டினை வழங்கினர்.

No comments:
Post a Comment