திருச்செந்தூர் அருகே ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலை கண்டெடுப்பு! திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டின் பின்புறம் மரக்கன்று வைக்க தோண்டிய போது மண்ணில் புதைத்து கை, கால் சேதமடைந்த நிலையில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டு திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருகே சீர்காட்சி கிராமத்தை சேர்ந்த பொன் நாடார் மகன் வேல்குமார் என்பவர் வீட்டின் பின்புறம் மரக்கன்று வைப்பதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது மண்வெட்டியால் குழி தோண்டிய போது ஏதோ சிலை மீது மண்வெட்டி படுவது போல் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.
உடனே அந்த இடத்தில் கை வைத்து தோண்டிய போது கை, கால் துண்டிக்கப்பட்ட நடராஜர் சிலை இருந்துள்ளது. இது குறித்து திருச்செந்தூர் தாசில்தாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாசில்தார் பாலசுந்தரம், மாநாடு தண்டுபத்து விஏஓ வெங்கடேசன், மெஞ்ஞானபுரம் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் வின்சென்ட் வீட்டுக்கு வந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த சிலையை தாசில்தார் பாலசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நடராஜர் சிலை கை, கால் சேதமடைந்த நிலையில் உள்ளது. சுமார் 15 கிலோ எடையும், ஒன்றை அடி உயரமும் கொண்ட ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலை ஆகும்.
சிலையில் இரண்டு கால்கள், கை, தலைமேல் உள்ள குமிழ் போன்றவை இல்லை. மேலும் சிலையின் பீடமும் இல்லை. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சிலையை திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியத்துக்கு அனுப்பி, அந்த சிலை ஜம்பொன் சிலையா, அல்லது வெண்கல சிலையா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்

No comments:
Post a Comment