நாசரேத் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை! மின் நுகர்வோர்களுக்கு சீராக மின்சாரம் வழங்க மின்சாரத்துறை அதிகாரிகள் முன் வருவார்களா?சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
நாசரேத் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதினால் மின் நுகர்வோர்களுக்கு சீராக மின்சாரம் வழங்குவதில் தடை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகள் முன் வருவார்களா? என சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் பேரூராட்சி மூன்றாவது வார்டுக்குட்பட்ட இரயில்வே கேட் தெரு, என்.டி.என்.தெரு, என்.டி.என். குறுக்குச் சந்து, விநாயகர் தெரு, ஜெயபாண்டியன் தெரு மற்றும் நாசரேத் சுற்று வட்டாரப் பகுதிக ளில் இரவு நேரங்களில் குறைந்தது ஒரு நாளைக்கு 10 முறையாவது மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின் நுகர்வோர்களின் மின்சாத னங்கள் பழுதடைந்து விடுகிறது. இதனால் இரவு முழுவதும் குழந் தைகள் முதல் வயதானவர்கள் வரை சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இது பல நாட்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இரவு 10:30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி மற்றும் 7:45 முதல் 8:25 வரை நீண்ட நேர மின்தடை ஏற்பட் டுள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவக்காற்று துவங்குவதற்கு முன்பாக மின்கம்பி வழித்தடத்தை உரிய காலத்தில் பராமரிக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என தெரிய வருகிறது. மின் வினியோக கட்டமைப்பிற்குள் இருக்கும் மின் நுகர்வோர்களுக்கு தடையற்ற சீரான மின்சார வழங்கிடுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment