நாசரேத்தில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா! நாசரேத்தில்கோடை கால கால்பந்து பயிற்சி நிறைவு விழா நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருடந்தோறும் மாணவர்களுக்கு கோடை கால கால்பந்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு நாசரேத் மர்காஷிஸ் கிளப் மற்றும் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் கோடைகால கால்பந்து பயிற்சி தொடங்கி 15 நாட்கள் நடந்தது. அதில் 104 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.தூய யோவான் பேராலய தலைமைகுரு. ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல், கால் பந்து வீரர் நேவின் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மர்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ரோக்லண்ட் வாழ்த்திப் பேசினார்.கால்பந்தாட்ட பயிற்சியாளராக தனபால், அசோக், வினோத் ஆகியோர் செயல்பட்டனர். நிறைவு நாளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கு கால்பந்தாட்ட சீருடைகளும் , தொடர்ந்து வருகை புரிந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன கால்பந்து வீரர் நசரேயன் நன்றி கூறினார்.
நாசரேத் நிக்சன், செய்தியாளர்.

No comments:
Post a Comment