தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 May 2024

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்.

 


தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்.


தூத்துக்குடி, மே.21, இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சலக அடையாள அட்டை' எனும் சேவை மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியுடன் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும். 


இதனை முகவரிச் சான்றாக வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சலக அடையாள அட்டையினை பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை ரூ.20/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 


இதனை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று அந்த பகுதி தபால்காரர் மூலம் சரிபார்க்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.250/- பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22/- அதிகமாக செலுத்த வேண்டும். இந்த அட்டை மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். ஆதார் அட்டை முகவரி மாற்றம் செய்ய இதனை ஒரு சான்றாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn. சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad