பெருந்தலைவர் காமராஜர் வழிநின்று வணிகர் நலனுக்காக பிச்சையெடுத்தாயினும் கேடயமாக நின்று காப்பேன்...தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் ரெ.காமராசு நாடார் உருக்கம்.
திருச்செந்தூர்,மே.06_
தமிழ்நாடு வணிகர் சங்கம் 41_வது வணிகர் தின விழா ,வணிகர் சுதந்திர முழக்க முதல் மாநில மாநாடு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் தூத்துக்குடி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வணிகர் சங்கம் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்செந்தூர் தனியார் மகாலில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில தலைவர் ரெ.காமராசு வணிகர் சங்க கொடியேற்றி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது:-
கடந்த சித்ரா பவுர்ணமியன்று உதயமானது தான் தமிழ்க புதிய வணிகர் சங்கம் அமைக்கும் முடிவு. ஆண்டவன் உத்தரவுப்படி அமைய பெற்றது தான் இந்த புதிய வணிகர் சங்கம். வணிகர்களுக்காக உண்மையாக போராட உதயமானது இந்த இயக்கம். வணிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கேடயமாக இருந்து காப்போம் என்பதற்காகவே கொடியினை கேடயத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் வாள் போன்று வடிவமைத்தோம். வணிகர்களை கேடயம் போல் காப்போம். வணிகர்களுக்கு சுமையை தராமல் எளிதாக அவர்கள் கட்டும் வகையில் ஜிஎஸ்டி 12 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ரத்தத்தை உறிஞ்சுவது போலுள்ள டோல்கேட் கட்டணத்தை குறைக்கவேண்டும். உணவுப்பொருள் தயாரிப்பில் மூலப்பொருளான தண்ணீர் தரமற்றிருந்தால் தண்ணீரை தரும் கார்ப்பரேசன் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு வணிகர்கள் மீது உணவுக் கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம். அணைத்து சட்டமும் மக்களுக்காக வகுக்கப்பட்ட தேயன்றி அதிகாரவர்க்கத்துக்காக அல்ல. மக்களுக்காக சேவையாற்றும் வணிகர்களை கேவலப்படுத்தாதீர்கள். இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதில் வணிகர்களின் பங்கு மகத்தானது.
பெருந்தலைவர் காமராஜர் வழி நின்று வணிகர்கள் மாற்று திறனாளி மற்றும் அணைத்து தரப்பு வணிகர்களையும் காக்க பிச்சையெடுத்தாயினும், எனது உயிரை பணயம் வைத்தாயினும் அணைத்து தரப்பு வணிகர்களையும் காக்க துணை நிற்பேன்...மாற்று திறனாளிகளுக்கென தனி வணிகர் சங்கம் அமைத்த முதல் பெருமை நம்சங்கத்தையே சாரும்....என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் மேலும் உருக்கமாக பேசினார்.கூட்டத்தில் திருச்செந்தூர் _சென்னை, திருச்செந்தூர் _கோவைக்கு சிறப்பு ரெயில் , மாற்று திறனாளி மாதாந்திர உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்துவது அவர்தம் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் வணிகர் சங்க மாநில செயலாளர் சு.நாகராஜன், பொருளாளர் ராஜா ராமச்சந்திரன்,மாநில துணைத்தலைவர் செல்வன், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் எஸ்.யாபேஷ், மாநில இணைச்செயலாளர் சதீஷ், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.செல்வின் , மாநில இளைஞரணி செயலாளர் எம்.கவாஸ்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ச.ம.க மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புத ராஜ், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் சித்திரை ராஜா, சிபிஎம் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முத்துகுமார்,சிபிஐ திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முருகன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி, முன்னாள் மண்டல செயலாளர் சோ.சு.தமிழினியன், விசிக எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர், உள்பட அணைத்து கட்சி நிர்வாகிகள் வணிகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அணைவருக்கும் மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment