ஆலந்தலை ஆலயத்தில் இயேசுவின் திரு இருதய 150 வது யுபிலி துவக்க விழா.... மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி வைத்தார்....
திருச்செந்தூர் மே 4
மாதத்தின் முதல் வெள்ளியான இன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை திருத்தலத்திற்கு வருகை தந்தார். அவருக்கு திருத்தல அதிபர் மற்றும் ஊர் மக்களாலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயர் ஸ்டீபன் ஆலயத்தில் அமர,திரு இருதய வழிபாடு, திருத்தல அதிபர் சில்வெஸ்டரால் வழிநடத்தப்பட்டது. தொடர்ந்து ஆயர் புனித மார்கரீத் மரியாளுடன் புனித பொருளால் இறை மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி னார்.
பின்னர் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு அருட்பணி பென்சிகர் ஆகியோர் முன்னிலையில் யூபிலி ஆண்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நற்கருணை சிற்றாலயமும், புனிதர்கள் பயன்படுத்திய புனித பொருட்கள் நற்கருணை ஆலயத்தில் இறை மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது இதனை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அர்ச்சித்து வைத்தார்.
தொடர்ந்து அனையா விளக்கு ஏற்றப்பட்டு ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள் பங்கேற்றனர். ஏராளமான இறைமக்கள் இத்திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்றனர்.
350வது யுபிலி ஆண்டு நிகழ்வாக ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆயர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தல அதிபர் சில்வெஸ்டர் மற்றும் உதவி பங்கு தந்தை பாலன் மற்றும் யூபிலி விழா குழுவினர், பக்த சபைகள்,ஆலந்தலை இறைமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து இறை மக்களுக்கும் அசன விருந்து கொடுக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.


No comments:
Post a Comment