பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாலமன் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை.
நாசரேத், மே 10, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி முதல் வர தொடங்கியுள்ளன அதனை தொடர்ந்து, நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 600க்கு 489 மதிப்பெண்களுடன் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சுபிக்ஷா முதலிடத்தையும், 600க்கு 482 மதிப்பெண் எடுத்து ஹரிஷ்மா இரண்டாம் இடத்தையும், 600க்கு 466 மதிப்பெண் எடுத்து சகீனா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் பள்ளி நிர்வாகி பியூலா தலைமை ஆசிரியயை சாந்தி கனகராஜ் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

No comments:
Post a Comment