நாசரேத் பேருந்து நிலையத்திற்கு நேரக்காப்பாளர் நியமிக்க கோரிக்கை!
நாசரேத் பேருந்து நிலையத்திற்கு அரசு நேரக்காப் பாளர் இல்லாத காரணத்தினால் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் நினைத்த நேரத்திற்கு இயங்கும் பேருந்துகளாக மாறி உள்ளன இதனால் அரசு பேருந்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கு முன்னாலே எடுத்துச் செல்வதால் அரசு பேருந்துக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதுடன் பொதுமக்களும் பேருந்து வசதி இல்லாமல் அதிக கஷ்டப்படுகிறார்கள் ஏற்கனவே நாசரேத் வழித்தடத்தில் மிகக் குறைந்த பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது அந்தப் பேருந்துகளும் அட்வான்ஸாக சென்று விடுவதால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள் ஆகவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக உடனடியாக நேரக் காப்பாளரை நியமித்து அரசு வருவாயை தக்க வைத்துக் கொள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் தனியார் பேருந்துகள் ஒன்றும் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவது கிடையாது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தில் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
நாசரேத் மற்றும் நாசரேத் மார்க்கமாக தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உடன்குடி மெஞ்ஞானபுரம் சாத்தான்குளம் திசையன்விளை தூத்துக்குடி திருச்செந்தூர் திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் நாகர்கோவில் என்று பல வழித்தடங்களில் பேருந்து இயக்கப்படுகின்றன. இவ்வளவு பேருந்துகள் இயக்கப்பட்டும் அரசு மெத்தனமாக இருப்பது நோக்கம் தனியாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் பேசி வருகின்றனர். அரசு புதுப்புது பேருந்துகளாக இயக்குவது மட்டும் போதாது அதை நிர்வாகம் பண்ணுவது சரியாக இருந்தால் தான் அரசுக்கு வரக்கூடிய வருமானம் ஒழுங்காக வந்து சேரும்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment