பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் அசன பெருவிழா! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 May 2024

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் அசன பெருவிழா!

 


பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில்  அசன பெருவிழா! 

 
பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய பிரதிஷ் டையை  முன்னிட்டு நடந்த அசன பெருவிழாவில் திரளானோர் பங் கேற்றனர்.
                          


நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுத லின் ஆலய 125 வது பிரதிஷ்டை மற்றும் 65வது உயிர்மீட்சிக்கூட்டங் கள்  கடந்த  4 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிரதிஷ்டை ஆராதனையும், பரி.திருவிருந்து ஆராதனையும் நடந்தது. குருவான வர் ஜேசன் ஜோதி அருட்செய்தி கொடுத்தார். மாலை 4  மணிக்கு ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது . சேகரகுரு. டேனியல்  ஆல்பிரட் ஜெபித்து  அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன.  வெள்ளிக்கிழமை  காலை 9 மணிக்கு அறுப்பின் பண்டிகை ஆராதனை, ஆண்கள் ஐக்கிய பண்டிகை,  பரி.திருவிருந்து ஆராதனை நடந்தது. கொடைரோடு குருசேகர தலைவர் பிரபுதாஸ் அருட்செய்தி கொடுத்தார். மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டியும், மாலை 7.30 மணிக்கு  கலை நிகழ்ச் சிகளும் நடந்தது.சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு  திடப்படுத்தல் ஆராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு வாலிபர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை)   காலை 9 மணிக்கு பாடகர் ஞாயிறு நடக்கிறது. இதனை தொடர்ந்து வாலிப ஆண்கள் மற்றும் பெண்கள் பண்டிகை  நடக்கிறது.மாலை 7 மணிக்கு ஸ்தோத்திர ஜெபக்கூட்டம்  நடக்கிறது. ஹெலன் சத்தியா குழுவினர்  சிறப்பு பாடல்களோடு  தேவ செய்தி கொடுக்கிறார்கள். ஏற்பாடுகளை  சேகர தலைவர் வெல்ற்றன் ஜோசப், சேகர குரு.டேனியல் ஆல்பிரட்,   தூய பரமேறுதலின் ஆலய அசன கமிட்டி தலைவர்  ராபின்சன், உப தலைவர் ஞானையா, செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் பொன் செல்வன்,  பொருளாளர் கோல்டன்பிரபு, சேகர செயலர் அதிசயம், பொருளாளர் ஆபிரகாம் பாஸ்கரன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஷம்மா அகஸ்டின், திலகர்,  சபை ஊழியர்கள் ஆரோன் மாசிலாமணி, டென்சிங், கன்வென்ஷன் பொறுப்பாளர் எட்வின்  மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், அசன கமிட்டி உறுப்பினர்கள், சபை  மக்கள் செய்துள்ளனர். 

நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad