நாசரேத் பேராலயத்தில் வி.பி.எஸ் பவனி.
நாசரேத், மே 09. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் கடந்த மே 1 முதல் மாணவ மாணவிகளுக்கான "வலிமை" எனும் தலைப்பில் விடுமுறை வேதாகம பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறு வயது முதல் மேனிலை பள்ளி வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வேதாகம கதைகள், வேதாகம பாடல்கள் மற்றும் வேதாகம குறிப்புகளில் இருந்து பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று மே.08, கிறிஸ்துவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி பகுதிக்கு சென்று வி.பி.எஸ் மாணவ மாணவிகளுக்கு கால்டுவெல் மிசனெரி பற்றிய நேரடி விளக்கம் கொடுக்கப்பட்டது.
இன்று மே.09, மாலையில் விடுமுறை வேதாகம பயிற்சி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியே பவனியாக சென்று சிறப்பு பாடல்களை பாடி தூய யோவான் பேராலயத்தை வந்தடைந்தனர்.
இந்நிகழ்வின் ஏற்பாடுகளை பேராலய குருவானவர்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment