தாமிரபரணி தமிழ் இலக்கிய பேரவையில் பாராட்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 May 2024

தாமிரபரணி தமிழ் இலக்கிய பேரவையில் பாராட்டு விழா.

 


தாமிரபரணி தமிழ் இலக்கிய பேரவையில் பாராட்டு விழா.


ஏரல், மே.19,  ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில், தாமிரபரணி இலக்கிய பேரவையில்,  தமிழ் இலக்கிய படைப்பாளர்களுக்கு பாராட்டு விழா, இதழாளர் இசைக்கும் மணியின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. ஏரல் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் இரட்டை முத்து தலைமை தாங்கினார், விஷ்வர்கர்மா பேரவைச் செயலர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஏரல் லோபா முருகன் இலக்கிய சிறப்புரையாற்றினார். 


இந்நிகழ்ச்சியில் முக்குபீரி கவிஞர் தேவதாசன், நாசரேத் எழுத்தாளர் கன்னகுமார விஸ்வரூபன், ஏரல் கவிஞர் ராஜன், இசைக்கும் ஞானி ஆகியோருக்கு பொற்கிழி வழங்கினர். விழாவில் இலக்கிய பெருமன்ற மாநில குழு உறுப்பினர் கணபதி சுப்பிரமணியன், சமூக செயற்பாட்டாளர் பெருமாள்,  ராஜபாளையம் முன்னேற்றம் பதிப்பகம் வீர. பாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


கவிஞர் ராஜன் தொகுத்து வழங்கினார் கவிஞர். வீடியோ மணி, யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன், கணேசன், ஐயப்பன், செல்வம், வாய்ப்பாட்டு கலைஞர்  கந்தன், கொற்கை விநாயகம், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad