ஆழ்வார்திருநகரியில் ராமானுஜர் அவதார தினம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 12 May 2024

ஆழ்வார்திருநகரியில் ராமானுஜர் அவதார தினம்.

 


ஆழ்வார்திருநகரியில் ராமானுஜர் அவதார தினம். 


ஆழ்வார்திருநகரி. மே.12  ஆழ்வார்திருநகரியில் உடையவர்(ராமானுஜர்) சன்னதி அமைந்துள்ளது. வைஷ்ணவ வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டவர். தான் மட்டுமே உபதேசம் பெற்ற ஓம் நமோ நாராயண மந்திரத்தை தான் அழிந்தாலும் சாதி மத பேதமற்ற மற்றவர்கள்  பெருமாள் திருவடி சம்பந்தம் பெற திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மேல் ஏறி உரக்க உரைத்தார். 


அவரது அவதார திரு நட்சத்திரம் திருவாதிரை  இன்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆழ்வார்திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் உள்ள ராமானுஜர் சன்னதியில் கடந்த 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இன்று 10 ந் திருவிழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு விஸ்வரூபம். 5 மணிக்கு திருமஞ்சனம். 6 மணிக்கு திருவாராதனம். 6.30 மணிக்கு திருப்பாவை கோஷ்டி  நடந்தது.


காலை 9 மணிக்கு ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு எழுந்தருளி மரியாதை பெற்றுக் கொண்டார். பின்னர் உடையவர் சன்னதிக்கு எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு  சாயரட்சை. இரவு 9.30 மணிக்கு நம்மாழ்வார் மாலை பிரசாதங்கள் வரப் பெற்று சாத்து முறை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள். திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாமி உபயதாரர்கள் ஆரியாஸ் சங்கர் பாபு, விக்ரம்  கிருஷ்ணா, ராம் பிரசாத். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad