தூத்துக்குடி மாவட்டம், மே 4, தென்திருப்பேரை பஸ் நிறுத்தத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 May 2024

தூத்துக்குடி மாவட்டம், மே 4, தென்திருப்பேரை பஸ் நிறுத்தத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.

 


தூத்துக்குடி மாவட்டம், மே 4, தென்திருப்பேரை பஸ் நிறுத்தத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.


தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில், ஆழ்வார் திருநகரி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது அதன் அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. பல வருடங்களாக அனைத்து வகை பேருந்துகளும் நின்று சென்றன. 


இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில பேருந்துகள் தவிர மற்ற அனைத்து வகை பேருந்துகளும் நிறுத்தாமல் செல்கின்றன. இதனால் பயணிகளும் அரசு பணியாளர்களும் அரசு அலுவலகம் செல்பவர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 


பேரூராட்சியான தென்திருப்பேரையில்  அரசு மேல்நிலை பள்ளி, தொடக்க கல்வி அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், அரசு வங்கிகள், பேறுகால வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை உட்பட அரசு மற்றும் பொது துறை பணிகள் அலுவலகம் அதிகம் உள்ளன. அது மட்டுமின்றி நவ திருப்பதி தளங்களில் ஒன்றான கோயிலும் உள்ளது. ஆனால் எந்த ஒரு அரசு அலுவலகங்களும் இல்லாத சிற்றுராட்சியான குரும்பூர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்கின்றன. 


எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad