இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்த திருச்செந்தூரே சேர்ந்த 2 வயது குழந்தை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மைலப்பபுரம் தெருவைச்சேர்ந்த சுப்பிரமணியன்-கிருத்திகா தம்பதியரின் மகன் சித்தார்த் ராஜாமணி. 2 வயதான சித்தார்த் இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பிடம் இருந்தும், இந்தியா வேர்ல்ட் ரெகார்ட்ஸ் என்ற அமைப்பிடம் இருந்தும் மிக திறமையான குழந்தை என்ற விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சித்தார்த் மற்ற குழைந்தைகளை விட அதிக நினைவாற்றல் கொண்டு சிறந்த விளங்கியதை கண்டுபிடித்த பெற்றோர்கள் திறமைகள் அடங்கிய காணொலி காட்சியை இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பிற்கான விருது பெறவிண்ணப்பித்தனர்.
தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள்,உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் வாரத்தின் 7 நாட்கள், உடல் உறுப்புகள், பழங்கள் மற்றும் வனவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்களின் பெயர்கள் மற்றும் தமிழ் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமை மற்றும் நினைவாற்றலை பாராட்டும் விதமாக இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் இந்தியா வேர்ல்ட் ரெகார்ட்ஸ் அமைப்பும் சித்தார்த்துக்கு திறமையான குழந்தை என்ற விருதை வழங்கி கவுரவித்தது. அதுமட்டுமில்லாமல் மேலும் 2024ம் ஆண்டிற்கான சாதனை புத்தகத்திலும் சித்தார்த்தின் திறமையை இடம்பெறசெய்துள்ளது. இன்றைய நாகரீக உலகில் குழந்தைகள் செல்போன்தான் உலகம் என்று இருக்கின்ற நிலையில் இரண்டு வயதான சிறுவன் நினைவாற்றலில் அசத்தி இரு விருதுகளை பெற்றுசாதனை படைத்துள்ளதற்கு திருச்செந்தூர் மக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்


No comments:
Post a Comment