திருச்செந்தூர் தனியார் மகாலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக.சார்பில் திருச்செந்தூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தேர்தல் தொகுதி பொறுப்பாளருமான மா.பா.பாண்டியராஜன் பேசினார்.அவர் பேசியதாவது:- திருச்செந்தூரில் மீண்டும் புனித போர் தோடங்கியுள்ளது. சிவன் பார்வதி கந்தன் ஆகிய மூன்று தெய்வங்களின் பெயரையும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சிவசாமி வேலுமணியின் இந்த புனித போரில் சிவனும் பாராவதியும் சேர்ந்து பார்வதி தனது சக்தியை திரட்டி கொடுத்த வேலால் தேவர்களை துன்புறுத்திய அசுரனை வதம் செய்ததுபோல நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் எனும் புனித போரில் மக்களை துன்புறுத்தும் எதிரிகளை வென்று சிவசாமி வேலுமணி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் வெற்றி இங்கிருந்து தொடங்கட்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். அனைவருக்கும் ஈஸ்டர்,ரமலான் என்றும் இந்து கிறிஸ்தவ முஸ்லீம் ஆகிய அணைத்து மதத்தவருக்கும் வாழ்த்து சொல்லக்கூடிய தகுதி படைத்தது என கூறி முடித்தார். அதிமுக பூத்கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேசியதாவது:-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புரட்சி தலைவி ஜெயலலிதா வழியில் தற்போது அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதிமுகவில் மட்டும் தான் ஒரு எளிய தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பது நடக்கும். எனை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் நாயைபோல் நன்றியுடன் உழைப்பேன். நான் இந்த மண்ணை சேர்ந்தவன். இந்த மண்ணை நேசிக்கிறவன். நான் அதிமுகவில் பொறுப்பு வகிப்பதற்கும் வேட்பாளராக தேர்வு செய்தமைக்கும் புண்ணியம் செய்தவனாவேன். இந்த தொகுதியில் வெற்றிபெற்ற கனிமொழி எந்த மக்கள் நலத்திட்டங்களும் செய்யவில்லை. அவர்கள் பணபலம் அதிகார பலம் மிரட்டல் உருட்டலை நம்பி களத்தில் உள்ளனர். ஆட்சி மாறும் காட்சிகள் மாறும். இவ்வாறு சிவசாமி வேலுமணி பேசினார்.
முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசும்போது:- நடைபெறவிருக்கும் தேர்தல் அதிமுகவின் பலத்தை நிரூபிக்ககூடிய தேர்தலாகும். பூத் வாரியாக வீடு வீடாக சென்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து அடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார்தான் முதல்வர் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.என பேசினார். அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வை ஒன்றிய செயலாளர் க.விஜயகுமார், துணை செயலாளர் பாலமுருகன், திருச்செந்தூர் நகர செயலாளர் வி.எம்.மகேந்திரன், ஜெ.பேரவைமாவட்ட தலைவர் ப.தா.கோட்டை மணிகண்டன், ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் மு. சுரேஷ் பாபு, மாவட்ட பிரதிநிதி சுந்தர், பழக்கடை திருப்பதி, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், ஜெ.பேரவை வினோத் உள்பட திரளான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment