திருச்செந்தூர் பகுதிகளில் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 April 2024

திருச்செந்தூர் பகுதிகளில் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு திருவிழா நாட்கள் தவிர்த்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன.

திருச்செந்தூர் பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கப்படுகிறது இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும் அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.


இதனால் போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்து உரிய அறிவுரைகளை வழங்கினார். போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். திருச்செந்தூர் ஆட்டோ டிரைவர்களுக்கு தாலுகா போலீசில் நடந்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி,ராமேஸ்வரிபோக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் வேல்முருகன் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad